திராட்சை செடி உவமை
திராட்சைச் செடி.
இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானமாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் யோவான் 15:1-6 இல் காணப்படுகிறது. இது கதை வடிவில் அமையவில்லை. மாறாக, இயேசு தன்னைத் திராட்சைச் செடிக்கும், கடவுளைத் தோட்டக்காரருக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
உவமை
தொகுநான் மெய்யான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கின்ற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சைச்செடி; நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகுவெளியிணைப்பு
தொகு- தமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Talbert, Charles H. (1994). Reading John: A Literary and Theological Commentary on the Fourth Gospel and the Johannine Epistles. Reading the New Testament (Revised ed.). Macon, Georgia: Smyth & Helwys Publishing Incorporated. pp. 219–221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1573122785.
- ↑ "Intro to Ezekiel". Biblica (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-10-09. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ Hatzidakis, Manolis; Drakopoulou, Evgenia (1997). Έλληνες Ζωγράφοι μετά την Άλωση (1450-1830). Τόμος 2: Καβαλλάρος - Ψαθόπουλος [Greek Painters after the Fall of Constantinople (1450-1830). Volume 2: Kavallaros - Psathopoulos]. Athens: Center for Modern Greek Studies, National Research Foundation. pp. 205–208. hdl:10442/14088. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 960-7916-00-X.