திரிசக்தி அருங்காட்சியகம், ஜகார்த்தா

இந்தோனேசிய மாகாணம்

திரிசக்தி அருங்காட்சியகம் (Trisakti Museum) அல்லது மே 12 சோக அருங்காட்சியகம் (May 12 Tragedy Museum) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அருங்காட்சியகமாகும். இது ஒரு மனித உரிமை அருங்காட்சியகமாகும் . இந்தோனேசிய மாணவர்கள் திரிசக்தி பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஈடுபட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட செயலினையும் அவர்களுடைய பங்கினையும் இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.[1]

மே 1998இல் நடைபெற்ற இந்தோனேசிய கலவரத்தின்போது திரிசக்தி பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸ் படையினருடன் மோதிக்கொண்டனர்.

மே 12, 1998 ஆம் நாளன்று சுடப்பட்ட நான்கு மாணவர்களைப் பற்றி இந்த அருங்காட்சியகம் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது. அருங்காட்சியகத்தில் சிறிய கட்டுரைகள், செய்தித்தாள்கள், ஆபரணங்கள், ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படங்கள், இறந்தவரின் புகைப்படங்கள் மற்றும் அவற்றின் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் செய்திகளின் தொகுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]

வரலாறு

தொகு

இந்தோனேசியா முழுவதும் மாணவர்கள் சீர்திருத்தத்தை கோரி திரண்டிருந்த காலகட்டத்தில், 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தோனேசிய பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தின் பின்னணியில் திரிசக்தி அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.[3]

இந்தோனேசியாவில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களின் ஒரு பகுதியாக திரிசக்தி பல்கலைக்கழக மாணவர்கள் இருந்தனர். அவர்கள் இந்த அமைதியான எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொண்டனர்.[3] மே 12, 1998 ஆம் நாளன்று திரிசக்தி பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்துபோது இந்த இயக்கம் அதன் உச்சத்தைத் தொட ஆரம்பித்தது. ஆர்டே பாருவின் வீழ்ச்சியடைய இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

அந்த சோகத்தை நினைவு கூறுகின்ற வகையில், இந்த அருங்காட்சியகம் மேற்கு ஜகார்த்தாவில் க்ரோகோல் என்னும் இடத்தில் உள்ள திரிசக்தி பல்கலைக்கழக வளாகத்தில், டாக்டர் சயரிஃப் தாஜேப் கட்டிடத்தின் லாபியில் அமைக்கப்பட்டது.[3]

முக்கியமான சிற்பம்

தொகு

திரிசக்தி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது பல்கலைக்கழக மாணவர்களை ஒரு போலீஸ் அதிகாரி அடக்குவதைச் சித்தரிக்கின்ற மனித அளவிலான சிற்பம் ஆகும்.[4]

பின்னணி

தொகு

திரிசக்தி பல்கலைக்கழக வளாகத்தில் கர்சியா என்பவருடைய மகனான ஹென்ட்ரியவன் சீ என்பவர் தாக்குதல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் மகள் இந்த வலி தந்தைக்கு ​​எப்போதும் போலவே தீவிரமாக உள்ளது. ஏனென்றால் அவருக்கு அந்த மகன் ஒரே குழந்தை என்று அவர் கூறியுள்ளார். அவரது மரணத்தின் சுமை இன்னும் மிகப் பெரியதாகும். மே 12, 1998 ஆம் நாளன்று, திரிசக்தியின் வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் நுழைய முயன்றபோது ஹென்ட்ரியவன் கழுத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கிடையில் அவரைச் சுற்றி எங்கு பார்த்தாலும் குழப்பம் நிலவியது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில், திரிசக்தி மாணவர்கள் 6,000 பேர் கொண்ட பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து, களத்தில் இறங்கினர். அப்போதைய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். மாணவர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கில் பிரதிநிதிகள் சபைக்கு அமைதியான முறையில் அணிவகுத்து சென்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அந்த நேரத்தில், துப்பாக்கிகள், கண்ணீர்ப்புகை போன்றவற்றைக் கொண்டு மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நிலைமை மோசமானது. வன்முறை வெடிக்க ஆரம்பிக்கவே 20 வயதான ஹென்ட்ரியவன் மற்றும் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த கொலைகள் நாடு முழுவதும் பரவலான கலவரத்தையும் வன்முறையையும் தூண்ட ஆரம்பித்தது. இதன் விளைவாக ஜனாதிபதி பதவி விலகும் நிலை ஏற்பட்டது.[4]

குறிப்புகள்

தொகு
  1. "Museum Trisakti Saksi Sejarah Reformasi". tribunnews.com. 19 May 2012. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014. {{cite web}}: External link in |publisher= (help)
  2. "Museum 12 Mei". dentistrisakti.com. Archived from the original on 26 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); External link in |publisher= (help)
  3. 3.0 3.1 3.2 "Festival Museum 2010". Trisakti University. Archived from the original on 12 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014. பிழை காட்டு: Invalid <ref> tag; name "trisakti" defined multiple times with different content
  4. 4.0 4.1 Remembering a tragedy, Mark Wilson, The Jakarta Post. 12 May 2015