திரித்துக் கூறல்
பொதுச் சட்ட அதிகார வரம்புகளில், திரித்துக்கூறல் (misrepresentation) என்பது ஒரு தவறான அல்லது தவறாக வழிநடத்தப்பட்ட உண்மை நிகழ்வுகள் மூலம்[1] ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்தும்போது, அந்த அறிக்கை மற்றத் தரப்பினரை ஒப்பந்தம் செய்யத் தூண்டுகிறது.[2] தவறாக வழிநடத்தப்பட்ட தரப்பினர் அவர் விருப்பத்தின்படி பொதுவாக ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கக் கோரலாம், அல்லது அதற்குப் பதிலாக சில சமயங்களில் சேதங்களும் கேட்கலாம்.
இங்கிலாந்து மற்றும் வேல்சில், தவறான பிரதிநிதித்துவச் சட்டம் அல்லது திரித்துக் கூறல் சட்டம் (1967) மூலம் பொதுச் சட்டம் திருத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற முன்னாள் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் இச்சட்டம் பொதுவான கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.