திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்
திரிபுரா உபசாதி சூபா சமிதி (Tripura Upajati Juba Samiti)("திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்") என்பது இந்திய மாநிலமான திரிபுராவில் 1977 முதல் 2001 வரை செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1988-93-ல், இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியுடன் சேர்ந்து திரிபுரா சட்டமன்றத்தில் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.
திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம் Tripura Upajati Juba Samiti | |
---|---|
சுருக்கக்குறி | TUJS |
நிறுவனர் | அரிநாத் தேபர்மா சியாம சரண் திரிபுரா[1] |
தொடக்கம் | 10 சூன் 1977[2] |
கலைப்பு | 2001 |
பின்னர் | |
கொள்கை | திரிபுரி தேசியம் |
கூட்டணி | இந்திய தேசிய காங்கிரசு |
நிறங்கள் | |
1988 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் | 7 / 60 |
2001-ல், திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம் கலைக்கப்பட்டு உடைந்து ட்விப்ராவின் உள்நாட்டுத் தேசியவாதக் கட்சி மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியை உருவாக்கியது.
தேர்தல் செயல்திறன்
தொகு1988 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசுடன் திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதில் 60 இடங்களில் 32 இடங்களில் வெற்றி பெற்றது.[3]
குறிப்பிடத்தக்க தலைவர்கள்
தொகு- சியாமா சரண் திரிபுரா
- அரிநாத் தேபர்மா
- நாகேந்திர ஜமாத்தியா
- திராவ் குமார் ரியாங்
- புத்த தேபர்மா
- கௌரி சங்கர் ரியாங்
- இரதி மோகன் ஜமாத்தியா
- இரவீந்திர டெபர்மா
- திபா சந்திர கராங்க்கோல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura, the land of fourteen gods and million statues". www.tripura.org.in. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
- ↑ "43. India/Tripura (1949-present)". University of Central Arkansas. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
- ↑ Chakrabarty, Bidyut (2014). Communism in India: Events, Processes and Ideologies (in ஆங்கிலம்). Oxford University Press. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-997489-4. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.