திரிவேணி ஆச்சார்யா
திரிவேணி ஆச்சார்யா (Triveni Acharya) மும்பையில் வசிக்கும் ஒரு இந்தியப் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலரும் ஆவார். இவர் பாலியல் கடத்தல் எதிர்ப்பு குழுவான "மீட்பு அறக்கட்டளை"யுடன் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானார்.
திரிவேணி ஆச்சார்யா | |
---|---|
தேசியம் | இந்தியா |
அமைப்பு(கள்) | மீட்பு அறக்கட்டளை |
விருதுகள் | ஆசிய ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விருது (2010) துணிச்சல் விருது (2011) குழந்தைகள் உலக மனிதாபிமான விருது (2013) |
பணிகள்
தொகுமீட்பு அறக்கட்டளையானது தனது கணவர் பால்கிருஷ்ணா ஆச்சார்யாவால் நிறுவப்பட்டது. ஆனால் 2005இல் ஒரு கார் விபத்தில் தனது கணவர் இறந்ததைத் தொடர்ந்து அதன் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.[1] இந்த அமைப்பு இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, மறுவாழ்வு அளித்தல் மற்றும் திருப்பி அனுப்புதல் மற்றும் கட்டாய விபச்சாரத்திற்காக விற்கப்படுவதை தடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.[2] and has been conducting "brothel raids" since 1993.[3] 1993 முதல் "விபச்சாரச் சோதனைகளையும்" நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ஆண்டுக்கு சுமார் 300 சிறுமிகளை விடுவிக்கிறது. மேலும் ஆலோசனை, வேலை பயிற்சி மற்றும் எச்.ஐ.வி பரிசோதனையையும் வழங்குகிறது.[4] இந்த சோதனைகளால் பாலியல் கடத்தல்காரர்களுக்கு பெரும்பாலும் கடுமையான நிதி இழப்பும் சிறைவாசமும் ஏற்படுவதால், இவர் பல மரண அச்சுறுத்தல்களைப் பெற்றுள்ளார்.[5]
விருதுகள்
தொகுஇவரது தலைமையில் அதன் பணிக்காக மீட்பு அறக்கட்டளை பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டில், இந்த குழு பெண்கள் தொழில்முனைவோருக்கான நாரி சக்தி விருது|நாரி சக்தி விருதைப் பெற்றது.[6] தைவான் அதிபர் மா யிங்-ஜியோ இவருக்கு தைவான் ஜனநாயக அறக்கட்டளையின் ஆசிய ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான விருதையும், 100,000 அமெரிக்க டாலர் ரொக்க மானியத்தையும் வழங்கினார்.[4] கடத்தலால பாதிக்கப்பட்டு அறக்கட்டளையால் காப்பாற்றப்பட்ட ஒருவரால் இந்த அமைப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[7] 2011 ஆம் ஆண்டில், ஆச்சார்யா தி டிரைன் அறக்கட்டளையின் தைரியப் பரிசை வென்றார். இது "தீமையை உறுதியாக எதிர்த்துப் போராடுபவர்களுக்கு" ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[8] "பாலியல் கடத்தல், வீட்டு வன்முறை மற்றும் சிறுவர் ஆபாச படங்களுக்கு" எதிரான தனது முயற்சிகளுக்காக வழங்கப்பட்ட மெக்சிக்கோ பத்திரிகையாளரான லிடியா கச்சோ ரிபேரோவுடன் இவர் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.[9] 2013ஆம் ஆண்டில், மீட்பு அறக்கட்டளையுடனான தனது பணியுடன் இணைந்து 2013 ஆம் ஆண்டின் மனிதநேய மரியாதைக்குரிய உலக விருது பெற்றார்.[10] அங்கீகாரத்துடன் 75,000 டாலர் ரொக்க மானியமும் கிடைத்தது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Us". Rescue Foundation. Archived from the original on 1 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Welcome to Rescue Foundation". Rescue Foundation. Archived from the original on 30 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2012.
- ↑ Mallika Kapur (2011). "Bound cruelly to their work". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/features/life/article2656540.ece. பார்த்த நாள்: 15 January 2012.
- ↑ 4.0 4.1 "Indian NGO wins accolades". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 10 December 2010 இம் மூலத்தில் இருந்து 30 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130930115237/http://www.hindustantimes.com/News-Feed/India/Indian-NGO-wins-accolades/Article1-636642.aspx. பார்த்த நாள்: 15 January 2012.
- ↑ "Triveni Acharya, Civil Courage Prize Honoree 2011". Civil Courage Prize. 2011. Archived from the original on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "A woman-friendly step, says Sonia". தி இந்து. 9 March 2008 இம் மூலத்தில் இருந்து 13 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080313213529/http://www.hindu.com/2008/03/09/stories/2008030958490800.htm. பார்த்த நாள்: 15 January 2012.
- ↑ Flora Wang (9 November 2010). "Rescue Foundation wins this year’s rights award". Taipei Times. http://www.taipeitimes.com/News/taiwan/archives/2010/11/09/2003488095. பார்த்த நாள்: 15 January 2012.
- ↑ "About the Prize". Civil Courage Prize. 2012. Archived from the original on 19 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "2011 Civil Courage Prize Honoree". civilcourageprize.org. October 2011. Archived from the original on 31 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "2013 Humanitarian Honoree World of Children Award". worldofchildren.org. September 2013. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
- ↑ "World of Children Award Cash Grant Awards". worldofchildren.org. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.