திருகோணமலை பிரித்தானிய யுத்தக் கல்லறை

திருகோணமலை பிரித்தானிய யுத்தக் கல்லறை (Trincomalee British War Cemetery) அல்லது திருகோணமலை யுத்தக் கல்லறை (Trincomalee War Cemetery) என்பது திருக்கோணமலையில் உள்ள பிரித்தானிய படையினரின் கல்லறையாகும். இரண்டாம் உலகப் போர் காலத்தில் கொல்லப்பட்ட பிரித்தானிய இராச்சியத்தின் படைவீரர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இக்கல்லறை திருகோணமலை நகரிலிருந்து, வடக்கில் சுமார் 6 கிலோமீற்றர் (3.7 மைல்) தொலைவில் திருகோணமலை-நிலாவெளி (ஏ6) வீதியில் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளது. இது இலங்கையில் உள்ள ஆறு பொதுநலவாய யுத்தக் கல்லறைகளில் ஒன்று ஆகும். இதனை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு பொதுநலவாய யுத்தக் கல்லறை ஆணைக்குழுவின் சார்பில் பராமரிக்கிறது.[2]

திருகோணமலை பிரித்தானிய யுத்தக் கல்லறை
திருகோணமலை பிரித்தானிய யுத்தக் கல்லறை
திருகோணமலை பிரித்தானிய யுத்தக் கல்லறை is located in இலங்கை
திருகோணமலை பிரித்தானிய யுத்தக் கல்லறை
திருகோணமலை பிரித்தானிய யுத்தக் கல்லறையின் அமைவிடம்
Details
Establishedஏப்ரல் 1948
Locationதிருக்கோணமலை
Countryஇலங்கை
Coordinates8°36′56″N 81°12′49″E / 8.6156°N 81.2137°E / 8.6156; 81.2137
Typeஇரண்டாம் உலகப் போர் பிரித்தானிய படைவீரர்கள்
(நிறுத்தப்பட்டுள்ளது)
Owned byபொதுநலவாய யுத்தக் சமாதி ஆணைக்குழு
Number of graves303[1]
Find a Graveதிருகோணமலை பிரித்தானிய யுத்தக் கல்லறை

உசாத்துணை தொகு

  1. CWGC: Trincomalee War Cemetery
  2. "History of Trincomalee". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2016-12-21.