திருகோணமலை பொது நூலகம்

திருகோணமலை பொது நூலகம் அல்லது திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகம் என்று அழைக்கப்படும் இந்நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திருகோணமலை நகரசபையினால் பராமரிக்கப்படும் நூலகமாகும்.

திருகோணமலை நகராட்சிமன்றப் பொது நூலகத்தின் இன்றைய தோற்றம்

வரலாறு தொகு

திருகோணமலைப் புறக்கோட்டை நூலகம் (Trincomalee pettah library) என அழைக்கப்பட்ட இந்நூலகம் 1835ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1946ம் ஆண்டு திருகோணமலை நகராட்சி மன்றத்தால் பொறுப்பேற்கப்பட்டது. 1835 இல் திருகோணமலையில் 2 நூலகங்கள் அமைக்கப்பட்டன. Liet.F.J.N. Ind. 37th Regiment நூலகத்தில் 17 பேர் அங்கத்தவர்களாக இருந்தார்கள். திருகோணமலைப் புறக்கோட்டை நூலகம் கடற்கரையோரமாகக் கட்டப்பட்டது. இது இன்றும் டொக்யாட் வீதியில் முற்றவெளியை அடுத்து காணப்படுகின்றது. 34 சந்தாக்காரர்களைநிரந்தர உறுப்பினராக் கொண்டிருந்த இந்த நூலகத்தில் 500 புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நூலகத்தின் தலைவராக ஜி. ஈ. கொலொம்ப், செயலாளராக பி. கிறிஸ்பெயின், பொருளாளராக ஜெ. ஏ. கிப்சன், அறங்காவலர்களாக வண. எஸ். ஓ. கில்னி, பி. கிறிஸ்பெயின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். துணை நூலகராக எல். டி சிமித் நியமிக்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகோணமலை_பொது_நூலகம்&oldid=3136618" இலிருந்து மீள்விக்கப்பட்டது