திருகோணமலை நகரசபை

திருகோணமலை நகரசபை (Trincomalee Urban Council, திருகோணமலை நகராட்சி மன்றம்) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

திருகோணமலை நகரசபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
கந்தசாமி செல்வராஜா, த. தே. கூ
ஏப்ரல் 2011 முதல்
துணைத் தலைவர்
சேனாதிராஜா சிறீஸ்கந்தராஜா, த. தே. கூ
ஏப்ரல் 2011 முதல்
செயலாளர்
ஏ. ஜி. தேவேந்திரா
உறுப்பினர்கள்12
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011

தேர்தல் முடிவுகள்

தொகு

1983 உள்ளூராட்சித் தேர்தல்கள்

தொகு

18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 10,940 69.58% 9
  ஐக்கிய தேசியக் கட்சி 2,542 16.17% 2
  சிறீலங்கா சுதந்திரக் கட்சி 2,135 13.58% 1
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 106 0.67% 0
செல்லுபடியான வாக்குகள் 15,723 100.00% 12
செல்லாத வாக்குகள் 77
மொத்த வாக்குகள் 15,800
பதிவில் உள்ள வாக்காளர்கள் 24,529
வாக்களித்தோர் 64.41%

2006 உள்ளூராட்சித் தேர்தல்கள்

தொகு

30 மார்ச் 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16,368 75.06% 10
சுயேச்சை 4,286 19.65% 2
  மக்கள் விடுதலை முன்னணி 895 4.10% 0
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 259 1.19% 0
செல்லுபடியான வாக்குகள் 21,808 100.00% 12
செல்லாத வாக்குகள் 935
மொத்த வாக்குகள் 22,743
பதிவில் உள்ள வாக்காளர்கள் 36,961
வாக்களித்தோர் 61.53%

2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்

தொகு

17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11,601 59.43% 8
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 4,137 21.19% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 2,044 10.47% 1
  மக்கள் விடுதலை முன்னணி 519 2.66% 1
அகில இலங்கைத் தமிழர் ஐக்கிய முன்னணி 463 2.37% 0
சுயேச்சை 1 419 2.15% 0
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 327 1.68% 0
சுயேச்சை 2 10 0.05% 0
செல்லுபடியான வாக்குகள் 19,520 100.00% 12
செல்லாத வாக்குகள் 560
மொத்த வாக்குகள் 20,080
பதிவில் உள்ள வாக்காளர்கள் 31,927
வாக்களித்தோர் 62.89%

மேற்கோள்கள்

தொகு
  1. Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). Jawaharal Nehru University.
  2. "Local Authorities Election 2006 Final Results Trincomalee Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
  3. "Local Authorities Election - 17.03.2011 Trincomalee District Trincomalee Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகோணமலை_நகரசபை&oldid=3558123" இலிருந்து மீள்விக்கப்பட்டது