திருக்காமீசுவரம் கற்பலகை
திருக்காமீசுவரம் கற்பலகை என்பது வெள்ளூரில் கண்டெடுக்கப்பட்ட கற்பலகையாகும். திருக்காமீசுவரம் என்பது இன்றைய வெள்ளூர் ஆகும். இவ்வூர் பிள்ளையார் கோயிலை ஒட்டியுள்ள மணல் மேட்டில் இக்கற்பலகை புதைந்திருந்தது.
கற்பலகை விவரம்
தொகு- அகலம் 34 செ. மீ
- கல்வெட்டு மொழி தமிழ்
- முன்புற வரிகள் 20
- பக்கவாட்டு வரிகள் 14
- ஆட்சியாண்டு சடையவர்மர் சுந்தர பாண்டியரின் 18ஆம் ஆட்சியாண்டு
கல்வெட்டு செய்தி
தொகுவெள்ளூரில் உள்ள பெருமாள் கோயில் திருமேற்கோயில் என்றழைக்கப்பட்டுள்ளது. கோயில் முதன்மைத் தெய்வங்களான அழகிய பெருமாள், அவரது நாச்சியார் இருவர் உட்படப் பிற தெய்வத் திருமேனிகளுக்கான காவல், உணவுக் கலங்கள், பெருமை மிகு சின்னங்கள் ஆகியவற்றிற்கான பொறுப்பு கோதண்டராமபுரம் கைக்கோள முதலியான அபிமானபூசணரைச் சேரும் என்று இக்கற்பலகை கல்வெட்டு கூறுகிறது.[1]