திருக்கிளியன்னவூர் சிவன் கோயில்

திருக்கிளியன்னவூர் சிவன் கோயில் திருக்கிளியன்னவூர் என்பது திண்டிவனம் அருகேயுள்ள வானூர் வட்டத்தில் அமைந்துள்ள கிளியனூர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இறையருள் கூடும் போது இன்னும் கூடுதல் தலங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். இத்தலம் வறுமை நீக்கும் தலமாகவும், எவ்வித நோய்களையும் அறவே போக்கி நலம் அருளும் தலமாகவும் விளங்குகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

276 ஆவது தலம் தொகு

இத்தலம் 276ஆவது தலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி இந்தியவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஞானசம்பந்தர் தேவாரம் முதல் தொகுதியில் திருவிடைவாய் பதிகத்தை அடுத்து இத்தலத்தின் பதிகம் வெளியிடப்பட்டுள்ளது.[1]

அமைவிடம் தொகு

திண்டிவனத்திற்கு அருகில் கிளியனூர் என்ற பெயரில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க தொகு