திருக்குடந்தைப் புராணம்

கும்பகோணத்தின் தல வரலாற்றினைப் பற்றி பல புராணங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது. திருக்குடந்தைப் புராணம் ஆகும்.

தல புராணங்கள்

தொகு

குடந்தையைப் பற்றி வந்துள்ள தலபுராணங்கள் கீழ்க்கண்டவாறு அமையும். [1]

  • கும்பகோணத் தல புராணம் - 1406 பாடல்கள் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • கும்பகோணப் புராணம் - 1118 பாடல்கள் -ஆசிரியர் அகோர தேவர்
  • கும்பகோணப் புராணம் - ஆசிரியர் ஒப்பிலா மணிப்புலவர்
  • திருக்குடந்தைப் புராணம் - 70 படலங்கள், 2384 பாடல்கள் - ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை

உருவாக்கம்

தொகு

1865இல் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை மற்றும் பல பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கும்பகோணம் பேட்டைத்தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்து இப்புராணத்தை இயற்றினார். [1]

சிறப்பு

தொகு

1866ஆம் ஆண்டு அச்சிடப்பெற்ற இப்புராணம் இலக்கியச் சிறப்புகள் கொண்டதாகும். இத்தலத்தின் சிறப்புகள் முழுவதையும் இப்புராணத்தில் காணலாம். [1]

ஆதிகும்பேசர்

தொகு

ஆதிகும்பேசர் பற்றி இப்புராணத்தில் காணும் பாடல் பின்வருமாறு அமையும். [2]

"பூமேய வாரணனும் நாரணனும்
வாரணனும் பொற்பூ மாலைத்
தேமேய விண்ணவரும் நண்ணவரும்
பசுமுலதாஞ் சிறப்பு நல்கி
மாமேய குடமூக்கி னிடமூக்கின்
பார்கருணை வடிவின் மேய
பாமேய புகாதி கும்பேசர்
தாமரைத்தாள் பணிந்து வாழ்வாம்."

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 முனைவர் வே.இரா.மாதவன், திருக்குடந்தைப் புராணம், மகாமகம் 2004 சிறப்பு மலர்
  2. கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம், தெய்வத்திருமலர், 1985