திருக்குறள் தொடைவெண்பா

இரண்டு திருக்குறள்களை இணைத்து வெண்பாவாகப் பாடும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆசுச் சொற்களை இடையில் சேர்த்து இது பாடப்பட்டுள்ளது. யாப்பருங்கல விருத்தி உரைநூலில் அவை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன. [1]

1

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு[2] - [நடைமுறையின்]
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு[3] [4]

2

எய்தற் கரிய இயன்றக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்[5][என்று - வய்யகத்து]
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு.[6] [7]

மேற்கோள் தொகு

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960
  2. குறள் 381
  3. குறள் 382
  4. பக்கம் 190
  5. குறள் 489
  6. குறள் 231
  7. பக்கம் 191
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குறள்_தொடைவெண்பா&oldid=3452598" இலிருந்து மீள்விக்கப்பட்டது