திருக்குளுத்தி


திருக்குளுத்தி அல்லது குளிர்த்தி என்பது கிழக்கிலங்கையின் அம்மன் ஆலயங்களில், குறிப்பாக கண்ணகி அம்மன் ஆலயச் சடங்குகளின் இறுதி நிகழ்வாகும். குளுத்தியிலேயே அம்மன் ஆலயச் சடங்கு நிறைவுறுவதால், சடங்கு காலம் முழுவதையும் "திருக்குளுத்தி உற்சவம்" என்று அழைப்பர்.

பெயர்க் காரணம்

தொகு

குளுத்தி என்பது "குளிர்த்தி" என்ற செவ்வழக்கின் திரிந்த வடிவம் ஆகும். மதுரையை எரித்த பின்னும் சீற்றம் தணியாதிருக்கும் கண்ணகியின் கோபத்தைத் தணித்து, அவளைக் குளிர்விக்கும் சடங்கே "குளிர்த்தி" ஆகின்றது.

காலம்

தொகு

திருக்குளுத்திச் சடங்கு காலம், ஆலயத்துக்காலயம் வேறுபடுகின்றது. 3, 5, 7, 9 போன்ற ஒற்றைப்படை நாட்களிலேயே இச்சடங்கு நடத்தப்படுவது வழக்கம். வைகாசி மாதத்திலேயே திருக்குளுத்தி இடம்பெற்றாலும், ஆலய மரபைப் பொறுத்து, வைகாசிப் பூரணை, வைகாசித் திங்கட்கிழமை என்று இருவேறு நாட்களில் குளுத்தி இடம்பெறுவதுண்டு.

மரபுகள்

தொகு

பொதுவாக, குளுத்தி காலம் முழுவதும், அம்மன் ஆலயங்களில் கண்ணகியம்மையின் வாழ்க்கையைச் சொல்லும் கண்ணகி வழக்குரை காவியம் பாடப்படும். சில ஆலயங்களில் அம்மன் திருவீதியுலாவும் ஊர்வலமும் கூட நடத்தப்படுவதுண்டு. கண்ணகி - கோவலன் திருமணத்தைப் பாடும் "கலியாணப்படிப்பு" பகுதி வழக்குரையில் வரும்போது, "கலியாணக்கால் நாட்டல்" எனும் சடங்கு நடத்தப்படும். தெரிந்தெடுக்கப்பட்ட வேம்பு அல்லது பூவரசிலிருந்து பெறப்படும் தடிமனான கிளை, சேலை முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஆலய முன்றலில் நாட்டப்படும். சடங்கின் இறுதிநாளிலேயே திருக்குளுத்திச் சடங்கு இடம்பெறும்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

தினக்கதிர், ஆகஸ்டு 22, 2015

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குளுத்தி&oldid=3247680" இலிருந்து மீள்விக்கப்பட்டது