திருக்கோணாசல வைபவம்

திருக்கோணாசல வைபவம் என்பது இலங்கையின் திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரத்தின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல் திருக்கோணமலையைச் சேர்ந்த வே. அகிலேசபிள்ளை என்பவரால் 1889 இல் இயற்றப்பட்டது. சுமார் அறுபது ஆண்டுகளின் பின்னர் 1950 இலேயே நூலாசிரியரின் மகனான அழகக்கோன் என்பவரால் அச்சிடப்பட்டது. 1999 இல் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

திருக்கோணேஸ்வர வைபவம் இப்போதும் கோணேஸ்வர ஆலயம் பற்றியும் திருகோணமலையிலுள்ள தமிழர்களின் வரலாறு பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்களாலும் வரலாற்றாளர்களாதும் பெறுமதியான ஆவணமாக நோக்கப்படுகின்றது.

வெளி இணைப்புகள்தொகு

திருக்கோணாசல வைபவம், நூலகத் திட்ட மின்னூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோணாசல_வைபவம்&oldid=1473520" இருந்து மீள்விக்கப்பட்டது