திருக்கோயில் (இதழ்)
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருக்கோயில் என்பது ஓர் ஆன்மீக தமிழ் இதழ். இது தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையால் 1958 இல் இருந்து நடத்தப்படுகிறது.
தோற்றம்
தொகு1958 இல் தொடங்கப்பட்ட திருக்கோயில் இதழ் இந்து சமயக் கோட்பாடுகள், திருக்கோயில் வரலாறுகள், மகான்கள் மற்றும் அடியார்களின் திருத்தொண்டுகள் மற்றும் வரலாறுகள், ஆன்மீகம் சார்ந்த வாழ்வியல் வழிகாட்டுதல்கள், அறக்கருத்துகள் ஆகியவை இதன் உள்ளடக்கங்கள். தமிழ் இலக்கிய, ஆன்மீக அறிஞர்கள் பலர் இதில் பங்கேற்று எழுதியுள்ளனர். கிருபானந்தவாரியார், ம.பொ.சிவஞானம், மு.அருணாச்சலம், கி.வா.ஜகந்நாதன், ந.சுப்புரெட்டியார், டி.என்.சிங்காரவேலு, அருணை வடிேவல் முதலியார், க.வச்சிரவேலர், கி.ஆ.பெ.விசுவநாதம், என்.சேதுராமன், க.த.திருநாவுக்கரசு, சுத்தானந்தபாரதியார், ச.வே.சுப்பிரமணியம், வ.சுப.மாணிக்கம், முனைவர் இரா.கலைக்கோவன், நாராயண வேணுகோபால நாயக்கர், மு.அருணகிரி, மற்றும் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள பலர் இதில் பங்களித்துள்ளனர்.
இதழ்ஆசிரியர்கள்
தொகுதிருக்கோயில் இதழின் அலுவல் வழி சிறப்பு ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இருக்க, ஆசிரியர்களாக 1958இல் இருந்து நா.ர.முருகவேள், அமிர்தலிங்கம்ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். அவருக்குப்பின் திரு தேவேந்திரன், திரு தெ ப ஏகாம்பரம், திரு இரா. இரகுநாதன் ஆகியோர் இதழ் ஆசிரியராக இருந்தனர். அலுவல் முறையில் துறையின் ஆணையர் சிறப்பாசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருப்பது வழக்கம். அவ்வகையில் தற்பொழுது ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப. அவர்கள் சிறப்பாசிரியராகவும் வெளியீட்டாளராகவும் உள்ளார். தற்போது இதழ் ஆசிரியர் முனைவர் ஜெ.சசிக்குமார்.
இதழ் சந்தா விபரம்
தொகுதனி இதழின் விலை ரூ.20, ஓராண்டுச் சந்தா ரூ. 240, பத்தாண்டுச்சந்தா ரூ.2300, ஆயுட்காலச் சந்தா ரூ.3450, (ஆயுட்காலம் 15ஆண்டுகள் மட்டும்).
இதற்கான பணவிடை அல்லது வரைவோலையை Commissioner, HR&CE Dept. Chennai -34 என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட துறை முகவரிக்கு அனுப்பவும்.
அலுவலகம்
தொகுமுகவரி: ஆசிரியர், திருக்கோயில் திங்களிதழ், இந்துசமய அறநிலையத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034 மின் அஞ்சல் https://tnhrce.gov.in/hrcehome/index.php பரணிடப்பட்டது 2019-08-12 at the வந்தவழி இயந்திரம் தொலைபேசி: 044 28334813,14,15 கட்செவி அஞ்சல்:9092392113
கிடைக்குமிடம்
தொகுஇவ்விதழ் தனியார் கடைகளில் கிடைக்காது. இணையம் வாயிலாக சந்தாதாரர் ஆகலாம். http://www. பரணிடப்பட்டது 2015-09-06 at the வந்தவழி இயந்திரம்[./https://tnhrce.gov.in/hrcehome/hrce_magazine.php பரணிடப்பட்டது 2019-10-15 at the வந்தவழி இயந்திரம்
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் கிடைக்கும். அலுவலக முகவரியில் நேரடியாகக் கிடைக்கும்.
உசாத்துணை
தொகு- அலுவல்முறை இணையத்தளம் பரணிடப்பட்டது 2019-10-15 at the வந்தவழி இயந்திரம்