திருச்சம்பரம் கோவில்

திருச்சம்பரம் கோவில் தென் இந்தியாவின், கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது வணிக ரீதியில் நறுமணப் பண்டங்களுக்குப் பெயர் போன தளிப்பரம்பா நகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பெயரானது, திரு சம்பரம் அல்லது புனித சம்பரம் என்று அறியப்பட்ட மகரிஷி சம்பரம் என்பவர் நினைவில் அமைந்ததாகும்.

ஆலய சிறப்பு

தொகு

இந்தக் கோவிலில் அமர்ந்து அருள் பாலிப்பவர் இறைவன் கிருஷ்ணராகும். இந்தக் கோவிலின் கர்பக்கிரகம் மற்றும் இதர சுவர்களில் காணப்படும் சிற்பங்கள் சிற்பக்கலைக்கு ஒரு பெரிய எடுத்துக் காட்டாகும். தென் இந்தியாவில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் சுவர்களில் காணப்படும் வண்ண வண்ண ஓவியங்களின் அழகையும் மெருகையும் சொல்வதற்கு ஈடாகாது. திருச்சம்பரம் கோவிலில் மூன்று குளங்கள் காணப்படுகின்றன. மேலும் துர்க்கை அம்மனை வழிபடும் சந்நிதியில் நாலு பக்கமும் நீரால் சூழ்ந்துள்ளது ஒரு அற்புதக் காட்சியாகும்.

திருவிழா

தொகு

ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் திருவிழா (உற்சவம்) மிகவும் அழகான நிகழ்ச்சியாகும். இந்த விழா பதினைந்து நாட்கள் நீண்டதாகும், மலையாள வழக்கப்படி கும்ப மாதம் 22 முதல் மலையாள நாட்காட்டிக் குறிப்பின் படி (பொதுவாக மார்ச் 6) இந்த உற்சவம் கொடியேற்றம் (கோவில் கொடியை பறக்க விடுவது) நிகழ்ச்சியுடன் துவங்குகிறது, மேலும் மீனம் மாதம் 6 அன்று முடிவுக்கு வருகிறது (பொதுவாக மார்ச் 20) மேலும் கூடிப்பிரியல் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது (உற்சவம் முடிவு பெறுதல்). இதற்கு இடையிலான, 11 நாட்களுக்கு, திடம்பு நிறுத்தம் (கிருஷ்ணர் மற்றும் பாலராமரின் பக்தர்களுடன் கூடிய ஆட்டம் பாட்டம்) என்ற நடன நிகழ்ச்சி பூகொத் நடையில் நடைபெறும் ( திருச்சம்பரம் கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில்).

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சம்பரம்_கோவில்&oldid=4143973" இலிருந்து மீள்விக்கப்பட்டது