திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்

திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் (இலத்தீன்: Tiruchirapolitan(us)) என்பது திருச்சிராப்பள்ளி ஆரோக்கிய அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்
Dioecesis Tiruchirapolitanus
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்மதுரை
புள்ளிவிவரம்
பரப்பளவு10,448 km2 (4,034 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
3,872,430
399,740 (10.3%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்அன்னை மரியா பெருங்கோவில்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர் †அந்தோனி டிவோட்டா

வரலாறு

தொகு
  • 1606: கொச்சின் மறைமாவட்டத்தின் மதுரா மறைபரப்பு பணி மையம் நிறுவப்பட்டது.
  • 1773: நிலை குறைக்கப்பட்டது.
  • 1836: மதுரா மற்றும் சோழமண்டல கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக புதுப்பிக்கப்பட்டது.
  • செப்டம்பர் 1, 1886: மதுரா மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
  • ஜூன் 7, 1887: திருச்சினோபொலி மறைமாவட்டம் என்று பெயர் பெற்றது.
  • அக்டோபர் 21, 1950: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.

சிறப்பு ஆலயங்கள்

தொகு

தலைமை ஆயர்கள்

தொகு
  • திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் அந்தோனி டிவோட்டா (நவம்பர் 16, 2000 – இதுவரை)
    • ஆயர் கபிரியேல் லாரன்ஸ் செங்கோல் (அக்டோபர் 6, 1990 – அக்டோபர் 14, 1997)
    • ஆயர் தாமஸ் பெர்னான்டோ (நவம்பர் 33, 1970 – அக்டோபர் 6, 1990)
    • ஆயர் ஜேம்ஸ் மென்டொன்சா (அக்டோபர் 21, 1950 – டிசம்பர் 19, 1970)
  • திருச்சினோபொலி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் ஜேம்ஸ் மென்டொன்சா (மார்ச் 7, 1938 – அக்டோபர் 21, 1950)
    • ஆயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (ஜனவரி 2, 1936 – ஜனவரி 8, 1938)
    • ஆயர் ஆங்கே-அகஸ்டே ஃபைசான்டியர், S.J. (டிசம்பர் 19, 1913 – செப்டம்பர் 24, 1934)
    • ஆயர் ஜீன்-மரி பார்த், S.J. (மார்ச் 21, 1890 – டிசம்பர் 19, 1913)
    • ஆயர் அலெக்சிஸ் கனோஸ், S.J. (ஜூன் 7, 1887 – டிசம்பர் 2, 1888)
  • மதுரா மறைமாவட்டத்தின் ஆயர் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் அலெக்சிஸ் கனோஸ், S.J. (செப்டம்பர் 1, 1886 – ஜூன் 7, 1887)
  • மதுரா மற்றும் சோழமண்டல கடற்கரை அப்போஸ்தலிக்க பிரதிநிதிகள் (ரோமன் ரீதி)
    • ஆயர் அலெக்சிஸ் கனோஸ், S.J. (ஏப்ரல் 25, 1846 – செப்டம்பர் 1, 1886)
    • ஆயர் கிளமென்ட் பொன்னான்ட், M.E.P. (அக்டோபர் 3, 1836 – ஏப்ரல் 3, 1850)
    • ஆயர் லூயிஸ்-சார்லஸ்-அகஸ்டே ஹெபெர்ட், M.E.P. (ஜூலை 8, 1836 – அக்டோபர் 3, 1836)

மேலும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு