சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madraspolitan(us) et Meliaporen(sis)) என்பது சென்னை சாந்தோம் புனித தோமையார் பீடப் பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் Archidioecesis Madraspolitanus et Meliaporensis | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 3,160 km2 (1,220 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 6,984,614 343,103 (4.9%) |
விவரம் | |
வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
கதீட்ரல் | புனித தோமையார் கதீட்ரல் பசிலிக்கா, சாந்தோம் |
இணை-கதீட்ரல் | வானதூதர்களின் புனித மரியா இணை-கதீட்ரல், ஜார்ஜ் டவுன் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
பேராயர் † | ஜார்ஜ் அந்தோனிசாமி |
இணையதளம் | |
http://www.archdioceseofmadrasmylapore.in/ |
வரலாறு
தொகு- ஜனவரி 9, 1606: திருத்தந்தை ஐந்தாம் பால், பதுரவாதோ மறைபரப்பு பணியின் பொறுப்பாளரான போர்ச்சுக்கல் அரசருடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக மயிலாப்பூர் மறைமாவட்டம் உருவானது.
- 1642: மயிலாப்பூரின் சாந்தோம் மறைமாவட்டத்தில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையின் அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவாக்கப்பட்டது.
- 1832: மெட்ராஸ் அப்போஸ்தலிக்க மறைவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
- செப்டம்பர் 1, 1886: மாநகர மெட்ராஸ் உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
- அக்டோபர் 10, 1950: பதுரவாதோ முறை ரத்து செய்யப்பட்டது. மயிலாப்பூர் மறைமாவட்டம் வேறு (Propaganda Fide) ஆளுகையின்கீழ் சென்றது.
- நவம்பர் 13, 1952: திருத்தந்தை 12ம் பயஸ் திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் இருந்து (Ex primaevae ecclesiae) என்ற ஆணையின்படி, சென்னை மற்றும் மயிலாப்பூர் மறைமாவட்டங்கள் இணைக்கப்பட்டு, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் என்று பெயர் பெற்றது.
தலைமை ஆயர்கள்
தொகு- சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள் (லத்தீன் ரீதி)
- பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, (நவம்பர் 21, 2012 - இன்றுவரை)
- பேராயர் மலையப்பன் சின்னப்பா, ச.ச. (ஏப்ரல் 1, 2005 – நவம்பர் 21, 2012)
- பேராயர் ஜேம்ஸ் மாசில்லாமணி அருள் தாஸ் (மே 11, 1994 – ஆகஸ்ட் 30, 2004)
- பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், சே.ச. (ஜனவரி 26, 1987 – நவம்பர் 10, 1993)
- பேராயர் அந்தோனி ராயப்பா அருளப்பா (பிப்ரவரி 1, 1966 – ஜனவரி 26, 1987)
- பேராயர் லூயிஸ் மத்தியாஸ், ச.ச (நவம்பர் 13, 1952 – ஆகஸ்ட் 2, 1965)
- மாநகர மெட்ராசின் பேராயர்கள் (லத்தீன் வழிபாட்டு முறை)
- மெட்ராசின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி (லத்தீன் ரீதி)
- ஆயர் பேட்ரிக் ஜோசப் கார்யூ (1840–1842)