திருச்சி சு. சுவாமிநாத ஐயர்

திருச்சி சுவாமிநாத ஐயர் (Tiruchi S. Swaminatha Iyer)(1 திசம்பர் 1910 - 1998)[1] என்பவர் கருநாடக இசைப் பாடகர் மற்றும் அறிஞர் ஆவார்.[2]

இளமை

தொகு

சுவாமிநாத ஐயர் 1910ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தந்தை திருவாயர் சுப்பிரமணிய ஐயரிடம் இசை கற்றார். 1926ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருவிசலூர் அய்யாவாள் உற்சவத்தில் தனது முதல் கச்சேரியை வழங்கினார்.[2] இதன் பிறகு பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தியாகராஜரின் அரிய படைப்புகளைப் பாடி புகழ் பெற்றார் இவர். இவரது தாத்தா ஒரப்பள்ளி அய்யா பாகவதர், தியாகராஜரின் நேரடி சீடர் ஆவார். கருநாடக இசைப் பாடகராக இருந்ததைத் தவிர, இவர் இசைப் பயிற்றுவிப்பாராக பணிபுரிந்தார். பல சீடர்களுக்கு இசை கற்பித்துள்ளார்.[1]

விருதுகள்

தொகு
  • 1987ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இவருக்கு கலைமாமணி விருதை வழங்கியது.
  • 1993-ல், மத்திய சங்கீத நாடக அகாடமி இவருக்கு கர்நாடக குரலிசை விருதை வழங்கியது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Saqaf, Syed Muthahar (8 July 2010). "Doyen remembered". The Hindu. Archived from the original on 9 March 2021. பார்க்கப்பட்ட நாள் 9 July 2023.
  2. 2.0 2.1 2.2 "Trichy Swaminathan Iyer". Archived from the original (PDF) on 4 August 2020.

வெளி இணைப்புகள்

தொகு