திருச்சுனை அகத்தீசுவரர் கோயில்
திருச்சுனை அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் திருச்சுனை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2][3] அகத்தியர் இக்குன்றிற்கு விசயம் செய்த போது, சிவனை வழிபட நினைத்து, அருகிலுள்ள பாறையில் சுனைநீரைத் தெளித்த போது, அப்பாறைப் பகுதி நெகிழ்வானது. அந்த நெகிழ்ந்த பகுதியை சிவலிங்கமாக வடிவமைத்து, அகத்தியர் வழிபட்டார்.
திருச்சுனை அகத்தீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°10′05″N 78°21′06″E / 10.1680°N 78.3517°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை மாவட்டம் |
அமைவிடம்: | திருச்சுனை |
ஏற்றம்: | 226 m (741 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அகத்தீசுவரர் |
தாயார்: | பாடகவள்ளி |
குளம்: | சுனை தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
வரலாறு | |
கட்டிய நாள்: | கி. பி. 13ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | மாறவர்மன் சுந்தரபாண்டியன்[1] |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 226 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருச்சுனை அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°10′05″N 78°21′06″E / 10.1680°N 78.3517°E ஆகும்.
இக்கோயிலில் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் தாயார் பாடகவள்ளி ஆவர். அகத்தீசுவரர், பாடகவள்ளி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், லிங்கோத்பவர், சண்டிகேசுவரர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர், அகத்தியர், உஷாதேவி சமேத சூரியன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ செ.சல்மான் பாரிஸ் (2021-11-29). "மதுரை திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் ஆச்சர்யம் - 67 ஆண்டுகளாக பாதாள அறையில் இருந்த சாமி சிலைகள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ மாலை மலர் (2021-11-25). "பழமையான அகத்தீசுவரர் கோவிலில் பாதாள அறையில் சாமி சிலைகள்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ தினத்தந்தி (2021-11-25). "பூட்டை உடைத்து பாதாள அறைைய திறந்து சிலைகளை வெளியே எடுத்த அதிகாரிகள்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ "Agastheeswarar Temple : Agastheeswarar Agastheeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.