திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
(திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் பகழிக் கூத்தர். இது திருச்செந்தூர் முருகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது; பாடல் எண்ணிக்கை 3+103. காலம் 15-ஆம் நூற்றாண்டு.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் புகழ் பெற்றது. இலங்கையில் வீட்டுக்குப் பூமி பூஜை செய்யும் போது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் நூலைத் திருச்செந்தூர் தலபுராணத்துடன் வைத்து வழிபாடு செய்த பின்னர்த் தான் கட்டட வேலைகளை ஆரம்பிப்பார்களாம்.[1]
திருச்செந்தூர் பிள்ளைத் தமிழுக்குப் பண்டித தா.கனகராஜையர் உரை இயற்றியுள்ளார். [1]
உசாத்துணை
தொகு- பிள்ளைத்தமிழ்க் கொத்து முதற்புத்தகம், கழக வெளியீடு