திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்

இந்திய மாநிலமான தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இவ்விருத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 19 டிசம்பர் 2009 அன்று நடைபெறும்.

கடந்த 21 நவம்பர் 2009 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் தி.மு.க வில் இணைந்ததால் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

வந்தவாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.ஜெயராமன் உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

அதன்படி இவ்விருத் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் அட்டவணை தொகு

தேர்தல் பணி தேதி
வேட்புமனு தாக்கல் 25 நவம்பர் 2009 - 2 டிசம்பர் 2009
வேட்புமனுக்கள் பரிசீலனை 3 டிசம்பர் 2009
வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் 5 டிசம்பர் 2009
இடைத் தேர்தல் 19 டிசம்பர் 2009
ஓட்டு எண்ணிக்கை 23 டிசம்பர் 2009


கட்சிகளின் நிலை தொகு

கட்சி நிலை வேட்பாளர்(கள்)
அ.தி.மு.க போட்டியிடுகிறது
23 நவம்பர் 2009 அன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
திருச்செந்தூர் - அம்மன் டி.நாராயணன்
வந்தவாசி - பி.முனுசாமி
தி.மு.க போட்டியிடுகிறது
24 நவம்பர் 2009 அன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
வந்தவாசி - எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன்
தே.மு.தி.க போட்டியிடுகிறது
26 நவம்பர் 2009 அன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
திருச்செந்தூர் - கோமதி ஆ.கணேசன்
வந்தவாசி - என்.ஜனார்த்தனன்
காங்கிரசு போட்டியிடவில்லை தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு
விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடவில்லை தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு
ம.தி.மு.க போட்டியிடவில்லை அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு
பா.ம.க போட்டியிடவில்லை 49 ஓ விண்ணப்பத்திற்கு ஆதரவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிடவில்லை அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு
இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடவில்லை அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு
பா.ஜ.க போட்டியிடவில்லை -



மேற்கோள்கள் தொகு