திருடன் மணியன்பிள்ளை (நூல்)

திருடன் மணியன்பிள்ளை 2013ம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தால், மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பெற்ற நூல். மூலநூலிற்கான ஆசிரியர் ஜி. ஆர். இந்துகோபன். தமிழில் மொழிபெயர்ப்பு குளச்சல் மு. யூசுப்.

திருடன் மணியன்பிள்ளை
திருடன் மணியன்பிள்ளை
நூலாசிரியர்மூலம்: ஜி. ஆர். இந்துகோபன்
தமிழில் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு. யூசுப்
நாடுஇந்தியா
மொழிமூலம்: மலையாளம்
மொழிபெயர்ப்பு: தமிழ் மொழி
வெளியீட்டாளர்காலச்சுவடு பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2013
ISBN9789382033004

இந்நூல் கேரளத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் இரவிபுரம், வாழத்துங்கல் எனும் ஊரில் 1950இல் பிறந்து, ஒரு திருடனாக வாழ்ந்து, தான் சந்தித்த பல்வேறு நிகழ்வுகளையும், தனது சாகச வாழ்வையும் மணியன்பிள்ளை கூறும் தன்வரலாற்று நூலான "தஸ்கரன்: மணியன்பிள்ளயுடெ ஆத்மகத" என்ற மலையாள நூலின் மொழிபெயர்ப்பாகும். இதை அவருடன் இணைந்து எழுதியவர் அதே ஊரைச் சேர்ந்தவரும், மலையாள மனோரமா நாளிதழில் பணியாற்றுபவருமான ஜி. ஆர். இந்துகோபன் என்பவராவார். இந்துகோபன் 88 அத்தியாயங்களில், 590 பக்கங்களில் மணியம்பிள்ளையின் 58 ஆண்டுகால வரலாற்றை எந்தவித சமரசமுமில்லாமல் பதிவு செய்து உள்ளார். மலையாள உலகின் வாழ்வியல் அனுபவங்களை இந்நூல் கண்முன்னே நிறுத்துகிறது.[1][2]

கேரள பல்கலைக்கழகத்தில் "இளங்கலை - மலையாள மொழியும் இலக்கியமும்" படிப்பிற்கான பாடத்திட்டத்தில் கூடுதல் வாசிப்பிற்கான நூலாக இந்நூலின் மலையாள மூலம் சேர்க்கப்பட பரிந்துரைக்கப்பட்டது பலத்த விவாதத்திற்குள்ளானது.[3][4] மலையாள மூலத்தின் இரண்டாம் பாகம் "கள்ளன் பாக்கி எழுதும்போல்" என்ற பெயரில் வெளியாகியுள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. ஜி. ஆர். இந்துகோபன், தமிழில்: குளச்சல் மு. யூசுப் (2013). திருடன் மணியன்பிள்ளை. காலச்சுவடு பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382033004.
  2. என். சுவாமிநாதன் (20 செப்டெம்பர் 2014). "இன்னொரு திருடன் உருவாகக் கூடாது! - முன்னாள் திருடர் மணியன்பிள்ளையுடன் ஒரு சந்திப்பு!". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6428938.ece. பார்த்த நாள்: திசம்பர் 12, 2015. 
  3. டி. பி. ராஜீவன் (24 மே 2009). "Jameela is in, Shakespeare out". The New Sunday Express. http://www.newindianexpress.com/magazine/article122154.ece. பார்த்த நாள்: திசம்பர் 12, 2015. 
  4. சுவப்னா கிரிதர் (திசம்பர் 12, 2009). "True value of biographies". The New Indian Express. http://www.newindianexpress.com/columns/article102701.ece. பார்த்த நாள்: திசம்பர் 12, 2015. 
  5. "Kallan Bakki Ezhuthumpol". indulekha.com. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 12, 2015.

வெளி இணைப்புகள்

தொகு