ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
(திருத்தொகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை என்பது ஒரு சைவ நூல். இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.
பாட்டுடைத் தலைவனின் புகழைத் தொகுத்துக் கூறுவது ‘திருத்தொகை’.
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.
காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.
ஆளுடைய பிள்ளையார் என்பவர் திருஞானசம்பந்தர். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை. அவற்றில் ஒன்று இந்த நூல்.
இந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.
- நூல் அமைதி
- இந்த நூல் கலிவெண்பாக் கண்ணிகளால் பாடப்பட்டுள்ளது.
- பாடல் பாங்கு
- பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
- கோவாக் குழலைச் சிலம்புரற்ற – ஓவா(து)
- அழுவான் பசித்தானென்(று) ஆங்கிறைவன் நாட்டத்
- தொழுவான் துயர்தீர்க்கும் தோகை – வழுவாமே
- முப்பத் திரண்டறமும் செய்தாள்.
இந்நூலின் கலிவெண்பாக் கண்ணிகள் இவ்வாறு நடைபயில்கின்றன.
காலம் கணித்த கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005