திருத்தொண்டர் திருவந்தாதி
திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.
அந்தாதி என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம்
திருத்தொண்டர் திருவந்தாதி நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.
காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.
சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் சைவத்தொண்டைப் போற்றிப் பாடுகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி அவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகிறது.
இந்தச் சுருக்கமான வரலாற்றை வைத்துக்கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் செய்துள்ளார்.
நூல் அமைதி
தொகுஇந்த நூலில் 63 நாயன்மாரைப் பற்றிய 90 (1 + 86 + 3) பாடல்கள் உள்ளன.
- புதுமைகள்
- முதல் பாடல் கணக்கில் கொள்ளப்படவில்லை. இரண்டாம் பாடல் ‘செப்பத் தகுபுகழ்த் தில்லை’ எனத் தொடங்குகிறது. 89-ஆம் பாடல் ‘அந்தாதி செப்பிடவே’ என முடிகிறது.
- 87-ஆம் பாடல் திருத்தொண்டர் கூட்ட அடியார்களைத் தொகுத்துக் கூறுகிறது.
- 88-ஆம் பாடல் ‘திருத்தொண்டத்தொகைப் பதிகம்’ என்னும் நூலிலுள்ள 10 பாடல்களில் வரும் முதலடிகளைத் தொகுத்துக் காட்டுகிறது.
- 89-ஆம் பாடல் இந்த நூற்பயன் கூறுகிறது.
- பாடல் பாங்கு
- செய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க்
- கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
- மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
- எய்திய காவிரிப் பூம்பட்டினத்துள் இயற்பகையே. (3)
காலம் கணித்த கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005