திருத்தொண்டர் புராண சாரம்

திருத்தொண்டர் புராண சாரம் என்னும் நூல் 14-ஆம் நூற்றாண்டு நூல். அதன் ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் என்ற முறையில் 63 பாடல்களும், அப்பருக்கும், சம்பந்தருக்கும் கூடுதலாக இரண்டு பாடல்களும், மற்றும் பாயிரப் பாடல்களும் சேர்த்து மொத்தம் 83 பாடல்களைக் கொண்டது இந்த நூல். மேலும் புராணப்பாடல் தொகை, தனியடியார். தொகையடியார், இனம் முதலான பாகுபாடுகளும் இந்த நூலில் அமைந்துள்ளன.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005