திருநிழல்மாலை
திருநிழல்மாலை என்பது மலையாள இலக்கியங்களில் ஒன்று. ஆறன்முளா பார்த்தசாரதி கோயில் இறைவனைப் பற்றியது. ராமசரிதத்தைப் போன்றே எழுதப்பட்டுள்ளது. மலையாளத்தில் அல்லாமல், தமிழினை ஒத்த மொழியில் எழுதப்பட்டது.
இதை ஆறன்முளாவின் புறஞ்சேரியான அயிரூரில் வாழ்ந்த கோவிந்தன் என்பவர் எழுதினார். இது கி.பி 1200 - 1300 ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டிருக்கலாம் என முனைவர் எம். எம் புருஷோத்தமன் நாயர் கூறுகிறார்.
உள்ளடக்கம்
தொகுஆறன்முளாவின் இறைவனின் நிழல் குறித்து விளக்குகிறது இந்த நூல். முதலாம் பாகத்தில் தேவதாசின் துதிகளும், பாரதகண்டம், கேரளோல்பத்தி, சேரராஜ்யம், அறுபத்திநான்கு ஊர்கள், ஆறன்முளை கிராமம் ஆகியனவும், இரண்டாம் பாகத்தில் தூவலுழியல், நாகூர் ஆகியனவும் அடங்கும். மலையர் அல்லது மலையரையர் என்போர் பற்றி மூன்றாம் பாகத்திலுள்ளது. தேவர்கள் வரலாறு, குறத்தி நிருத்தம், நிழலேற்றல் ஆகியனவும் மூன்றாம் பாகத்தில் உள்ளன. உள்ளடக்கத்திலும், மொழி நடையிலும் திராவிட சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இதன் சிறப்பு. எடுத்துக்காட்டு பாடல்
“ | முகிலான முன்சுகப்பும் முகிள்முல்லனகம் கயெற்றி கைத்தலமணிந்த செம்பொல்க்கனவள கலுபிலென |
” |
— திருநிழல் மாலையில் ஒரு பாடல் |
மொழியளவில் திராவிடச் சொற்களும், சமசுகிருதச் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், திராவிட சொற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. விருத்த நடையில் உள்ள பாகங்கள் தமிழினோடும் அக்கால மொழிநடையினோடும் ஒத்திருக்கிறது. மலையாள எழுத்தில் எழுதப்பட்டுள்ள இதன் பிரதி, கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளூரிலுள்ள சாமக்கான் தேவஸ்வத்தில் உள்ளது.