திருநெல்வேலி படுகொலைகள்

திருநெல்வேலி படுகொலைகள் என்பது 1983, சூலை 24, 25 காலப் பகுதியில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அந்நாட்டுப் படைத்துறையால் 51 வரையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். யூலை 23, 1983 இலங்கைப் படைத்துறையினரின் இரவு நேர வீதிப்பாதுகாப்பு நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியில்[1] சிக்கி பதின்மூன்று இராணுவம் இறந்ததை தொடர்ந்து பலாலி, சிவன் அம்மன் கிராம், ஆகிய பகுதிகளில் புகுந்த இலங்கைப் படைத்துறை தமிழர்களை படுகொலை செய்தது. [2]


மேற்கோள்கள் தொகு

  1. இதுவே தமிழீழ விடுதலைப்புலிகளால் இலங்கை இரானுவத்துக்கேதிரான முதலாவது பெரிய தாக்குதலாகும்..
  2. Lest we forget. Massacres of Tamils: 1956-2001, Part1. Kilinochi: NESOHR