திருப்பரங்கிரிப் புராணம்

திருப்பரங்கிரிப் புராணம் 16 ஆம் நூற்றாண்டில் நிரம்ப அழகிய தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது. திருப்பரங்குன்றத்தைத் திருப்பரங்கிரி எனக் கூறுவது அக்கால வடமொழி மோகம். காந்தம் என்னும் வடமொழி நூலில் தலமான்மியம் கூறும் பகுதியில் இந்தக் கதை உள்ளது என்பர். இது தமிழில் எழுதப்பட்ட புராணம். 11 சருக்கங்களும், 526 பாடல்களும் இதில் உள்ளன.

குமரன் உபதேசம், குமரன் தவம், சிபி வேந்தன் நிலக்கொடை, அரிச்சந்திரன் இங்கு வந்து ஆலயம் எடுத்தது முதலான கதைகள் இதில் கூறப்பட்டுள்ளன. சூர சமகாரச் சருக்கம், திருக்கல்யாணச் சருக்கம் என்றெல்லாம் நூல் வளர்கிறது.

பாடல் (எடுத்துக்காட்டு) [1]

உண்டிட உவட்டாது எழுந்த புத்தமுதே, ஊற்று எழப் பழுத்த தீங் கரும்பே
வண்டு எழாது அலர்ந்து வளர்ந்த பூங்கொடியே, வடித்திடாத் தெளிந்த செந் தேனே
எண் திசை விளங்க வரும் தனி விளக்கே, இனித்து இனித்து அருந்து கற்கண்டே
மண்டலம் புகழ வளர்ந்த பெண் அரசே, மறம் எழாது எழுந்த பேரொளியே [2]

இந்த நூலின் பதிப்புகள் இரண்டு உள்ளன. [3] [4]

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

  1. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.
  2. கலியாணத்துக்கு முன் வளையல் செட்டியாராக வந்த முருகன் கட்டியம் கூறும்போது வள்ளியைப் போற்றும் பாடல்.
  3. அ. நாராயண சரணர் பதிப்பு, மூலம், 1882,
  4. மு. ரா. அருணாசலக் கவிராயர், பொழிப்புரையுடன் இருமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளது, இவர் எயுதிய பிள்ளைத்தமிழுடன் சேர்த்து பதிப்பிக்கப்பட்டது, இரண்டாம் பதிப்பு 1928