திருப்பாடல் 130
திருப்பாடல் 130 (செப்துவசிந்தா எண்ணிக்கையில்: திருப்பாடல் 129), என்பது விவிலியத்தின் திருப்பாடல்கள் நூலில் இடம்பெறும் பாடலாகும். ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன் எனத்தொடங்கும் இப்பாடலானது தவத்திருப்பாடல்களுல் ஒன்றாகும். இலத்தீனில் இதன் துவக்கவரியான De profundis என்னும் பெயரால் அதிகம் அறியப்படுகின்றது. இது துன்பநேரத்தில் உதவிக்காக மன்றாடலும் சீயோன் மலைத் திருப்பயணப் பாடலும் ஆகும்.[1]
இது கிறித்தவத்தில் உத்தரிப்பு நிலையினருக்காக மன்றாடும் போது பயன்படுத்தப்படுகின்றது. இதனை வேண்டுவோருக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.
பாடல் வரிகள்
தொகுதமிழ் விவிலிய பொது மொழிபெயர்ப்பில் இப்பாடல்:
1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?
4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!
மேற்கோள்கள்
தொகு- ↑ விவிலிய பொது மொழிபெயர்ப்பு திருப்பாடல் 130 முன் குறிப்பு