திருப்பாளூர் மகாதேவர் கோயில்
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பாளூரில் அமைந்துள்ளது திருப்பாளூர் மகாதேவர் கோயில். இது சைவ, வைணவத் தலமாகும். சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், நரசிம்மர் ஆகியோர் முக்கியக் கடவுள்கள் ஆவர். இங்கு கணபதி, அய்யப்பன், நாகங்கள், அனுமன், சுப்பிரமணியர், பகவதி ஆகிய கடவுள்களின் சிலைகளும் உள்ளன.
புராணக் கதை
தொகுவைக்கம், ஏற்றுமானூர், கடுத்துருத்தி ஆகிய இடங்களில் சிவ லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தவர் கரப்பிரகாச முனிவர். ஒரு முறை வலதுகையிலும், இடதுகையிலும், காலிலும் மூன்று சிவலிங்கங்களை எடுத்துச் சென்றார். ஒரு தேவதை தோன்றி அவற்றை மூன்று இடங்களில் நிறுவியது. அந்த இடங்களே திருப்பல்லாவூர், அயிலூர், திருப்பாளூர் ஆகியன.