திருப்புகழ்ப் புராணம்
திருப்புகழ் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர் இந்த நூலை இயற்றினார். [2] இது சமண சமய நூல். இங்குள்ள திருப்புகழ் என்னும் சொல் அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழைக் குறிக்காது. அருகனுடைய வழியில் வந்த தீர்த்தங்கரர் ஒருவரின் புகழ் என்பதனைக் குறிக்கும் தொடரே இந் நூலிலுள்ள 'திருப்புகழ்'.
'திரு' என்னும் சொல் சமண நெறியில் [3] சமண மதத்தைக் குறிக்கும். இந்த நூலுக்கு முன்னர் தோன்றிய திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் என்னும் நூலின் பெயர்களால் இதனை அறியலாம்.
- திருவறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின் தாமம். [4] [5] [6]
- இறந்ததும் நிகழ்வும் மற்றை எதிர்வுமாம் புராணம் செய்தோன். [7] [8]
என்பன இந் நூலில் வரும் தொடர்ச்செய்திகள்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 80.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ திருந்திய கமல ஊர்தி திருப்புகழ் புராணம் செய்தோன் - என இவர் குறிப்பிடப்படுகுறார்.
- ↑ சம்பிரதாயத்தில்
- ↑ பாடல் 66
- ↑ திருவறம் என்பது சமணர் நோன்பு
- ↑ சமண நோன்பைக் கடைப்பிடிக்காதவர் சூளையில் தீயும் மண்பானைக்கு இட்ட மாலை போல் ஆவர்
- ↑ இங்குக் குறிக்கப்பட்ட புராணம் ஸ்ரீபுராணம் போலும் என்பது இரா. இராகவையங்கார் கருத்து
- ↑ ஸ்ரீபுராணம் செய்த புலவர் வடமொழியிலும் தென்மொழியிலும் புலமை மிக்கவர். திருப்புகழ்ப் புராணம் பாடிய மண்டலபுருடர் தமிழில் மட்டுமே புலமை உள்ளவர். எனவே ஐயங்கார் கருத்து பொருந்தாது என்பது மு. அருணாசலம் குறிப்பு