திருமணிமாலை

இசுலாத்தின் இறைதூதர்களான நபிமார்களில் ஒருவரான நபி இப்ராகிம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் காப்பியம் திருமணிமாலை ஆகும். இதனை தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் 1816 இல் படைத்தார். இக்காப்பியம் இயற்கையங் காண்டம் செயற்கையங் காண்டம் என இரு காண்டங்களைக் கொண்டது. முப்பத்தொரு படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்காப்பியம் 1908 விருத்தப்பாக்களை உள்ளடக்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமணிமாலை&oldid=1464124" இலிருந்து மீள்விக்கப்பட்டது