திருமலைக்கேணி

திருமலைக்கேணி கோயில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள சுப்ரமணியசுவாமி கோயில் ஆகும். திண்டுக்கலிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இக்கோயில் கரந்தமலை தொடரில் மலை உச்சியில் அழகிய வனந்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு மயில்களும், வானரங்களும் அதிகமாக காணப்படுகிறது. இத்தலத்தில் வற்றாத நீர் சுனை உள்ளது இதன் பெயர் காரணமாகவே இத்தலம் 'திருமலைக்கேணி' என்று அழைக்கப்படுகிது.

இத்திருக்கோயிலில் உள்ள நீர் ஒரு இடத்தில் வெந்நீராகவும், வேறு இடத்தில் சாதாரனமாகவும் மற்றுமொரு இடத்தில் மிக குளிர்ந்த நிலையிலும் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மௌனகுரு சுவாமிகள் என்ற சித்தர் பல காலங்களுக்கு முன்னர் இங்கு சீவசமாதி நிலை அடைந்துள்ளார் அவருக்கென தனிக்கோயில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலைக்கேணி&oldid=2254012" இலிருந்து மீள்விக்கப்பட்டது