திருமலைராயன்பட்டினம் ராஜசோளீசுவரர் கோயில்
திருமலைராயன்பட்டினம் ராஜசோளீசுவரர் கோயில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுபுதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருமலைராயன்பட்டினத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.[2] [1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் ராஜசோளீசுவரர் ஆவார். இறைவி அபிராமி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுவிநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள், மருதலிங்கர், பைரவர், சூரியன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் ஒரு புறம் விநாயகரும், ம்று புறம் சனீசுவரர் சன்னதியும் உள்ளன. [1]