திருமலை கிருஷ்ணர் சிலை

திருமலை கிருஷ்ணர் சிலை (Tirumala Krishna Idol) என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் உள்ள சிலைகளில் ஒன்றாகும். இந்தக் கோயில் விஷ்ணுவினை வெங்கடாசலபதி என்று வழிபட அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், விஷ்ணுவின் பிற அவதாரங்களான கிருஷ்ணர், இராமரின் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன. கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி சிலையும் இந்தக் கோவிலில் உள்ளது.

விளக்கம்

தொகு

கிருஷ்ணரின் சிலை ஒரு குழந்தையின் சுறுசுறுப்பான நடன (நவநீதா நிருத்ய) நிலையில் காணப்படுகிறது. இறைவன் நடனமாடும் நிலையில் காணப்படுகிறார். கிருஷ்ணரின் இடது கையை நடனமாடும் தோற்றத்தில் நீட்டித்தும், இடது கால் பீடத்திலும் உள்ளது. வலது கால் முழங்காலில் வளைந்து பீடத்தில் ஓய்வெடுக்காது காணப்படும். வலது கையில் வெண்ணெய் உள்ளது .[1]

ருக்மிணி சிலை

தொகு

ருக்மிணி தேவியின் இடது கையில் தாமரையுடன், வலது கை ஆசீர்வாதம் வழங்கும் நிலையில் உள்ளது. சிலை தாமரைப் பீடத்தில் உள்ளது. சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட சரியான தேதி, சிலையின் வரலாறு, கிருஷ்ணர் சிலையுடன் வைக்கப்பட்டதா என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.

சிலை வரலாறு

தொகு

சிலை எந்தத் தேதியில் பிரதிட்டை செய்யப்பட்டது என்பது குறித்த சரியான பதிவுகள் எதுவும் இல்லை. ஆனால் கி. பி. 1100-இல் கிருஷ்ண ஜெயந்தியின் போது நைவேத்யம் (உணவு பிரசாதம்) வழங்கப்பட்டதாக ஆரம்பக்காலப் பதிவுகள் தெரிவிக்கின்றன.[1]

சேவை

தொகு

கோவிலின் தினசரி பிரார்த்தனைகளில் சிறீ கிருஷ்ணரின் சிலை முக்கிய கவனத்தைப் பெறவில்லை. சிலைக்குத் தினசரி நைவேத்யம் கூட முக்கிய தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. கோவிலில் உள்ள இராமர் சிலைக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. வருடாந்திரக் கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தின் போது (கோயிலைப் புனிதப்படுத்தும் போது) சிலைகள் கர்பக் கிரகத்திலிருந்து (புனிதக் கருவறை) அகற்றப்பட்டு, அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு புனிதப் பொருட்களால் பிரதிட்டை செய்யப்பட்ட பிறகு சிலைகள் மீண்டும் வைக்கப்படுகின்றன.[2] போகா சிறீனிவாச சிலைக்குப் பதிலாகக் கிருஷ்ணர் சிலைக்கு ஏகாந்த சேவா செய்யப்படும்போது தனுர்மாசத்தின் போது சிலை கவனத்தை ஈர்க்கிறது.[3]

கிருஷ்ணர் சிலை பல்வேறு சந்தர்ப்பங்களில் கர்பா கிரகத்திற்கு வெளியே நேரடி பிரார்த்தனையில் இடம்பெறுகிறது.

  • தெப்போத்ச்சவம்: வருடாந்திர தெப்போத்ச்சவத்தின் போது (தெப்பத் திருவிழா) இரண்டாவது நாள் கிருஷ்ணர், ருக்மிணி சிலைகள் பயன்படுத்தப்படுகிறது. சிலைகள் சுவாமி புஷ்கரிணிக்கு (கோயிலின் வடக்கே உள்ள புனித ஏரி) கொண்டு வரப்பட்டு, பிரார்த்தனைகளுக்காக ஏரியின் நடுவில் உள்ள மண்டபத்திற்குத் தெப்பத்தில் எடுத்துச்செல்லப்படும்.[4]
  • வசந்தோற்சவம்: வருடாந்திரத் திருவிழாவின் போது, கிருஷ்ணர், ருக்மிணி சிலைகள் மூன்றாவது நாளில் மலையப்பா சுவாமி, தாயார், ராமர் சிலைகளுடன் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு இரத வீதிகளில் ஊர்வலமாக வசந்த மண்டபத்திற்கு எடுத்துவரப்படும்.[5]
  • கிருஷ்ண ஜெயந்தி: சிறப்புப் பிரார்த்தனைகளுக்குப் பிறகு, கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் வகையில் கோயிலைச் சுற்றி ஊர்வலமாகக் கிருஷ்ணர், ருக்மிணி சிலைகள் எடுத்துவரப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Dr N Ramesan (1981). The Tirumala Temple. Tirumala: Tirumala Tirupati Devasthanams.
  2. "Annual Seva". TTD. Archived from the original on 16 May 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-05-06.
  3. "Daily Seva". TTD. Archived from the original on 2002-10-06. பார்க்கப்பட்ட நாள் 2007-05-06.
  4. "Annual Seva". TTD. Archived from the original on 16 May 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-05-06.
  5. "Annual Seva". TTD. Archived from the original on 16 May 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலை_கிருஷ்ணர்_சிலை&oldid=4181700" இலிருந்து மீள்விக்கப்பட்டது