திருமாந்துறை (தென்கரை மாந்துறை)

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் திருமங்கலக்குடிக்கு பக்கத்தில் காணப்படும் மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படும். கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில், ஆடுதுறைக்கு வடக்கே 2 கிமீ தொலைவில் உள்ளது.

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்

தொகு

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும். [1]

சப்தஸ்தானப் பல்லக்கு வருகை

தொகு

சப்தஸ்தான விழாவின்போது திருமங்கலக்குடிக்கு மறுநாள் காலை 7.00 மணிக்கு வருகிறது. அங்கு சிறப்பு வழிபாடுகள் அரதத்தருக்கு நடைபெறும். இறுதியாக பல்லக்குக் கஞ்சனூர் வீதிகளில் வந்து கோயிலில் இறக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002