திருமிட்டக்கோடு கல்வெட்டு
திருமிட்டக்கோடு கல்வெட்டு (கி.பி. 1028) என்பது 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொறிக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு ஆகும் [1] திருமிட்டக்கோடு கோவிலின் கதவுச் சட்டத்தின் ஒற்றை கருங்கல் கட்டையின் மேற்புறத்தில் வட்டெழுத்து எழுத்துகளில் (சில கிரந்த எழுத்துக்கள் கலந்து) பழைய மலையாள மொழிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. [1] இந்தக் கல்வெட்டு, கேரளாவில் காணப்படும் அரிய சோழர் கால கல்வெட்டுகளில் ஒன்றாகும். [1]
- சேரமான் பெருமாள் வம்சத்தைச் சேர்ந்த கோடா ரவியின் 8 ஆம் ஆட்சியாண்டின் தேதியிடப்பட்ட கல்வெட்டு (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு), சோழப் பேரரசர் முதலாம் இராசேந்திர சோழனின் (ஆட்சியாண்டு 1012-1044 கி.பி) ஆட்சியுடன் தொடர்புடையது. [1]
- பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் அரச கட்டளைகளை நிறைவேற்றி வந்த தொண்டைநாட்டின் மேலூர் கோட்டம் காவனூரைச் சேர்ந்த சேக்கிழான் சக்திஜெயன் என்ற "சோழ முத்தரையன்" திருமிட்டக்கோடு கோவிலுக்கு நாற்பது "பழங்காசு"களுக்குச் சமமான தங்கத்தைப் பரிசாக அளித்ததை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது. [1]
- கோவிலின் பழைய மலையாளப் பெயரை "திருவிட்ருவக்கோடு" என்று பதிவு குறிப்பிடுகிறது. இது "மூழிக்குளம் ஒப்பந்தம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]