திருமுகப் பாசுரம்

திருமுகப் பாசுரம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன.

பதினோராம் திருமுறையில் உள்ள நூல்

தொகு

திருமுகப் பாசுரம் பதிரோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று. இதன் காலம் கி. பி. 705.

மதுரை நான்மாடக் கூடலில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே திருமுகப் பாசுரம் (அறிமுகப் பாடல்) ஒன்று எழுதி பாணபத்திரன் என்னும் யாழிசைப் பாணனிடம் கொடுத்து சேரமான் பெருமாள் நாயனாரிடம் அனுப்பியதாக உள்ள பாடல் ஒன்று பதினோராம் திருமுறையின் முதல் பாடலாக உள்ளது. சேரமான் பெருமாள் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.

பாடலில் எழுதப்பட்ட கடிதம்

மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவும் பால்நிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆலவாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
உரியவை உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாணபத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.

சிவஞான வள்ளல் நூல்

தொகு
திருமுகப் பாசுரம் என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இதில் ஏழு பாடல்கள் உரையுடன் உள்ளன. இந்த ஏழு திருமுகங்களில் (கடிதங்களில்) சந்திரசேகர சுவாமிகள், திரியம்பகர் என்பவருக்கு, மத்தியார்ச்சுனத்தில், உபநிடத வாக்கியத்தை, அருளிச்செய்த செய்திகள் கூறப்பட்டுள்ளன.

காலம் கணித்த கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுகப்_பாசுரம்&oldid=3175964" இலிருந்து மீள்விக்கப்பட்டது