திருமுறை கண்ட புராணம்
திருமுறை கண்ட புராணம் [1] என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நூலை உமாபதி சிவாசாரியார் செய்தார் என்னும் கருத்து நெடுங்காலமாக நிலவிவருகிறது. இதனைச் சரி என ஏற்பதற்கோ, தவறு எனத் தள்ளுவதற்கோ போதிய சான்றுகள் இல்லை.
இந்தப் புராணம் 46 பாடல்களைக் கொண்டுள்ளது. திருநரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி மன்னன் இராசராசன் வேண்டுகோளுக்கு இணங்கித் தில்லைச் சபையின் மேற்குப் பக்கத்தில் காப்பிடப்பட்டிருந்த திருமுறைகளை வெளிப்படுத்தி, இறைவன் கட்டளைப்படி அவற்றிற்குப் பண் வகுத்த வரலாற்றை இந்த நூல் கூறுகிறது.
இந்த நூலின் கடைசிப் பாடல்
- சீராரும் திருமுறைகள் கண்ட திறப் பார்த்திபனாம்
- ஏராரும் இறைவனையும் எழில் ஆரும் நம்பியையும்
- ஆராத அன்பினுடன் அடிபணிந்து அங்கு அருள் விரவச்
- சோராத காதல் மிகும் திருத்தொண்டர் பதம் துதிப்பாம்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 116.
{{cite book}}
: Check date values in:|year=
(help)