திருலோகி சீராப்தி சயனநாராயணப் பெருமாள் கோயில்
திருலோகி சீராப்தி சயனநாராயணப் பெருமாள் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் கும்பகோணம் அருகில் திருப்பனந்தாளுக்குக் கிழக்கே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள மூலவர் சீராப்தி சயனநாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தாயார் சீரநாயகி ஆவார். மூலவர் தென்புறம் முடியையும் வட புறம் ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேசன் மீது சயனித்த கோலத்தில் உள்ளார். தாயார் சனி சன்னதியில் உள்ளார். [1]
பிற சன்னதிகள்
தொகுவரதராஜ பெருமாள், யோக நரசிம்மர், விஷ்ணு துர்க்கை ஆகியோருக்கான சன்னதிகள் இக்கோயிலில் உள்ளன. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவெள்ளியங்குடியின் அபிமானத் தலமாக இத்தலம் உள்ளது. [1]