திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில்

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் என்பது திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் அமைந்துள்ள கோயிலாகும். இந்தக் கோவில் குபேரன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

இடுக்கு பிள்ளையார் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
கோயில் தகவல்
மூலவர்:விநாயகர்

இடுக்கு பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டாலும் விநாயகர் சிலை இக்கோயிலில் இல்லை. தரைப்பகுதியில் கால் பாத சிற்பம் காணப்படுகிறது. இடுக்கு பிள்ளையார் கோயிலில் நுழைந்து வரும் போது பக்தர்கள் இந்தப் பாதத்தை தொட்டு வணங்குகின்றனர்.

அமைப்பு

தொகு

கோயில் நேர்கோட்டில் அமையாத மூன்று வாசல்களை கொண்டது. பக்கவாட்டின் இருபுறமும் சுவர் உள்ளது. பின்பக்க வாசல் வழியாக நுழைந்து இரண்டாவது வாசலை தவழ்ந்தபடி அடைந்து மூன்றாவது வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இரண்டாவது வாசல் வழியே வெளிவர ஒருக்களித்து படுத்து கைகளை உந்தி சிரமப்பட்டு வெளிவர வேண்டியுள்ளது.[1]

பலன்கள்

தொகு

இந்தக் கோயிலில் உள்நுழைந்து வந்தால் பில்லி சூனியம் அகலும், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்று நம்புகிறார்கள்.[1] மேலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் இந்தக்கோயிலுக்குள் நுழைந்து வருகின்றனர்.

திருப்பணி

தொகு

இடுக்கு பிள்ளையார் கோயில் பரம்பரை கோயில் ஆகும். இந்தக்கோயிலை திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள ரங்கநாதன் என்பவர் பராமரிக்கிறார். இக்கோயிலுக்கு 1969 மார்ச் மாதம் 23 ஆம் நாள் முதன் முதலாக திருப்பணி செய்துள்ளனர். அதன்‌ பின்பு 1976 முதல் 2004 வரை பல முறை திருப்பணி நடைபெற்றுள்ளதாக குறிப்புகள் கோயிலில் எழுதப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 மலர், மாலை (8 டிச., 2016). "பழமையான இடுக்குப் பிள்ளையார் கோவில்". www.maalaimalar.com. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு