திருவனந்தபுரம் சென்ட்ரல்

திருவனந்தபுரம் சென்ட்ரல் கேரள மாநிலத்தின் பெரியதும் போக்குவரத்து மிகுந்ததுமான ஒரு இரயில் நிலையமாகும். மேலும் தென்னிந்தியாவின் முக்கியமான இரயில் நிலையமும் ஆகும். இந்த இரயில் நிலையக் கட்டிடம் நகரின் முக்கியமான கட்டிடங்களுள் ஒன்று. இது சிறீ சித்திரைத் திருநாள் மகாராசாவினால் 1931-இல் கட்டப்பட்டது. இது செங்கற்களால் அல்லாமல் முற்றிலும் கருங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு வரை செல்லும் நீண்ட இரயில் பாதையில் திருவனந்தபுரமே முதலில் வரும் பெரிய இரயில் நிலையம். இங்கு தினமும் 2,00,000 பயணிகள் வரை வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் சென்ட்ரல்
തിരുവനന്തപുരം സെൻട്രൽ
திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலைய மையக் கட்டிடம்
அமைவிடம்
ஆள்கூறு8.4874°N 76.952°E
வீதிதம்பன்னூர்
நகரம்திருவனந்தபுரம்
மாவட்டம்திருவனந்தபுரம்
மாநிலம்கேரளா
ஏற்றம்MSL + 16 ft
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகைமத்திய நிலையம்
அமைப்புதரைத்தளம்
நிலையம் நிலைபயன்பாட்டில் உள்ளது
வேறு பெயர்(கள்)திருவனந்தபுரம் சென்ட்ரல்
வாகன நிறுத்தும் வசதிஉள்ளது
நுழைவாயில்கள்2
Connectionsபேருந்து நிலையம், டாக்சி நிறுத்தம்
இயக்கம்
குறியீடுTVC
கோட்டம்திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம்
மண்டலம்தென்னக இரயில்வே (இந்தியா)
தொடருந்து தடங்கள்24
நடைமேடை12
வரலாறு
திறக்கப்பட்ட நாள்4 நவம்பர் 1931
மின்சாரமயமாக்கல்30 திசம்பர் 2005

வசதிகள் தொகு

இந்த நிலையத்தில் கீழ்க்காணும் வசதிகள் உண்டு.[1]

  • வாகன நிறுத்துமிடம்
  • மின் ஏணிகள்
  • நடை மேம்பாலம்
  • பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம்

நின்று செல்லும் வண்டிகள் தொகு

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு