திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில்

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும்.[1]

கோயில் முகப்பு

அமைப்பு

தொகு

முன் மண்டபம், அதைத் தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. அதனை அடுத்து கருவறை உள்ளது.

மூலவர்

தொகு

இவ்வாலயத்தின் கருவறையில் முத்துமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.கோயிலின் திருச்சுற்றில் மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியின் சிலைகள் உள்ளன.

குடமுழுக்கு

தொகு

இக்கோயிலின் குடமுழுக்கு 29.1.2010இல் நடைபெற்றதாகக் கல்வெட்டுக் குறிப்பு கோயில் வளாகத்தில் உள்ளது.

விழாக்கள்

தொகு

மாசி மாதம் பூச்சொரிதல் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்தப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  2. புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003

வெளியிணைப்புகள்

தொகு