பூச்சொரிதல் திருவிழா

பூச்சொரிதல் திருவிழா (பூச்சொறிதல், பூச்சொறியல், பூச்சொரியல்) தென் மாவட்டங்களில் அமைந்துள்ள பெண்தெய்வக் கோவில்களில் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

பூச்சொரிதல் திருவிழா நடைபெறும் கோவில்கள்

தொகு

இராமநாதபுரம்,கரூர்(கரூர் மாரியம்மன்),சிவகங்கை,தஞ்சாவூர்,திருச்சி சமயபுரம் மாரியம்மன்,குளித்தலை மகாமாரியம்மன், திண்டுக்கல்கோட்டை மாரியம்மன்,புதுக்கோட்டை அரியநாச்சியம்மன், அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன், திருவப்பூர் முத்துமாரியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன், இருந்திரப்பட்டி[ஸ்ரீமுத்துமாரியம்மன்]புன்னைநல்லூர் மாரியம்மன், வேகுப்பட்டி ஏனமாரியம்மன், அறந்தாங்கி வீரமாகாளியம்மன், காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன், பிள்ளைவயல் காளியம்மன் இன்னும் பல பெண் தெய்வங்களுக்கு பூச்சொரிதல் அல்லது பூச்சொரியல் விழா மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

திருவிழா நிகழ்ச்சிகள்

தொகு

வீடுகளில் காப்புக்கட்டப்படுகிறது. பெண்கள் வீதிகளை அடைத்துக் கோலமிடுகிறார்கள். உற்றார் உறவினர்கள் எல்லாம் திருவிழாவினைக் காண ஊர் விட்டு ஊர் செல்கிறார்கள். பூச்சொரிதல் விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர். நிறைய மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவரான பெண் தெய்வங்கள் மேல் சொரிந்து வணங்குவர்.

விரதமிருந்து வழிபடுதல், சக்திக்கரகம் அழைத்தல், முளைப்பாரி ஊர்வலம், பால்குட ஊர்வலம், தீச்சட்டி ஏந்துதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களும் இங்கு நிறைவேற்றப்படுகின்றன. கோவில்களில் தேரோட்டம், பூம்பல்லாக்கு, தெப்பம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. தண்ணீர்ப்பந்தல்கள் மற்றும் அன்னதானம் எல்லாம் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சொரிதல்_திருவிழா&oldid=3633732" இலிருந்து மீள்விக்கப்பட்டது