திருவரகுணமங்கை
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று
நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இறைவர்: கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள். இறைவி: வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார். தீர்த்தம்: அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியன: இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது.[1] இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருவரகுணமங்கை (நத்தம்) | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 8°38′13″N 77°55′27″E / 8.637065°N 77.924149°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவரகுணமங்கை |
பெயர்: | திருவரகுணமங்கை (நத்தம்) |
அமைவிடம் | |
ஊர்: | நத்தம் |
மாவட்டம்: | தூத்துக்குடி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விஜயாசனப் பெருமாள் |
தாயார்: | வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார் |
தீர்த்தம்: | அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | நம்மாழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
விமானம்: | விஜயகோடி விமானம் |
கல்வெட்டுகள்: | உண்டு |