திருவைகுண்டம்
திருவைகுண்டம் (ஆங்கில மொழி: Srivaikuntam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தலைமையிடமும்; தாமிரபரணி ஆற்றின் வடகரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
திருவைகுண்டம் | |||||||
ஆள்கூறு | 8°37′N 77°56′E / 8.62°N 77.93°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தூத்துக்குடி | ||||||
வட்டம் | ஸ்ரீவைகுண்டம்/ சட்ட மன்ற உறுப்பினர் = ஊர்வசி S.அமிர்தராஜ் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | க. இளம்பகவத், இ. ஆ. ப [3] | ||||||
பேரூராட்சி தலைவர் | சினேகவள்ளி பாலமுருகன் | ||||||
மக்கள் தொகை | 15,847 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 17 மீட்டர்கள் (56 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/alwarthirunagari |
இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 39 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 30 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. இங்குள்ள பராங்குசநல்லூரில், ஸ்ரீவைகுண்டம் தொடருந்து நிலையம் உள்ளது.[4]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,159 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 15,847 ஆகும்[5][6][7] 5.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[8] ஸ்ரீவைகுண்டம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
சிறப்புகள்
தொகுஇப்பேரூராட்சியில் உள்ள ஸ்ரீவைகுண்டநாதர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை நவதிருப்பதி தலங்களாகும். திருவேங்கமுடையார் மண்டபத்தில் உள்ள சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகுண்ட ஏகாதசி நாட்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெறும். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை கைலாசநாதர் கோயில் நவகைலாயங்களில் ஒன்றாகும். இறைவனுக்கு எதிரே உள்ள கோபுரம் திருமலை நாயக்கரால் துவங்கப்பட்டுக் கைவிடப்பட்டு அரைகுறையாக நிற்கிறது. இங்குள்ள யாளியின் சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவை. யாளியின் வாயில் உள்ள உருளும் பந்து நாயக்கர் கால சிற்பங்களின் சிறப்பு அம்சம்.
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் என்ற மகானின் அவதாரத் தலமும் ஆகும். இவர் தமது ஐந்தாவது வயது வரை வாய் பேசாதிருந்தார். இவரது பெற்றோர் அருகிலுள்ள திருச்செந்தூர்ப் பதியில் தங்கி விரதம் இருந்தனர். முருகன் இவர் முன் தோன்றி ஒரு மலரைக் காட்ட உடன் பூமேவு செங்கமல என்று துவங்கும் கந்தர் கலிவெண்பா பாடினார் என்பது வரலாறு. பின்னர் இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் அருளினார். காசி சென்று அங்கு சைவ மடத்தை நிறுவ விரும்பினார். அதற்கு நிலம் தந்து உதவி செய்ய வேண்டி தில்லி சுல்தானை அணுகினார். அவரிடம் பேச இந்தி மொழி அறிவு தேவைப்பட்டது. கலைவாணியைக் குறித்துப் பத்துப் பாடல்கள் அடங்கிய சகலகலா வல்லி மாலை என்ற நூலை இயற்ற, கலைவாணியின் அருளால் இந்தி மொழியில் அப்போதே வல்லமை பெற்று சுல்தானிடம் வேண்டிய உதவியைப் பெற்றார் என்பதும் வரலாறு ஆகும்.[9]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 8°37′N 77°56′E / 8.62°N 77.93°E ஆகும்.[10] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ https://indiarailinfo.com/station/map/srivaikuntam-svv/3799
- ↑ ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Srivaikuntam Town Panchayat
- ↑ [1]
- ↑ ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kumaraguruparar life history
- ↑ "Srivaikuntam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- தலபெருமை தினமலர்
- விக்கிமேப்பியாவில் அமைவிடம்
- கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்
- [2]'தமிழ்ஹிந்து' தளம் செப்டம்பர் 1, 2008, தமிழ்த் தாத்தா மஹாமஹோபாத்தியாய திரு உ வே சா. எழுதிய கட்டுரை ; ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் வெளியீடு, 1965.