திருவரங்கத் திருவாயிரம்
திருவரங்கத் திருவாயிரம்[1] வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்ட ஒரு நூல்.[2] திருவரங்கம், காவிரி கொள்ளிடத்திற்கு இடையிலான வைணவத் திருத்தலம். இங்கு கோயில் கொண்ட இறைவனைப் பற்றிப் பாடப்பெற்ற நூல் இதுவாகும்.
தலங்கள் பற்றியும் கடவுளர் பற்றியும் ஆயிரம் என்னும் பெயரிலான நூல்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் பல இயற்றப்பட்டுள்ளன. தலங்கள் பற்றிச் சுவாமிகள் பாடியனவாகத் தில்லைத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம் ஆகியன கிடைக்கின்றன. கடவுளர் பற்றி இவர் பாடியனவாகக் கணபதி ஆயிரம், சக்தி ஆயிரம், முருகன் ஆயிரம், சிவபெருமான் ஆயிரம், திருமால் ஆயிரம், ஞாயிறு ஆயிரம் ஆகியன கிடைக்கின்றன. தலஞ்சார் ஆயிரமாக திருவரங்கத் திருவாயிரம் அமைந்துள்ளது.
சிற்றிலக்கிய வகைகளும் யாப்பு வகைகளும் கலந்து அமைந்த தொகுப்பாகிய ஆயிரம் என்னும் இலக்கிய வகையாக இதனைக் கருதலாம்.
வெண்பாவந்தாதி, சீரங்க நாராயண சதகம், பசுக்காப்பு மாலை, காட்சிப்பத்து போன்ற இலக்கிய வகைமைகள் பல இந்நூலில் உள்ளன.
மேற்கோள்
தொகு- ↑ Vannacharabam Thandapani Swamigal. Thiruvaranga Thiruvayiram.
- ↑ "தண்டபாணி சுவாமிகள் 10". Hindu Tamil Thisai. 2015-11-28. பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.