திருவல்லம் சிறீ பரசுராம சுவாமி கோவில்
திருவல்லம் சிறீ பரசுராம சுவாமி கோவில் தென்னிந்தியாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும்.இது திருவனந்தபுரம் , திருவல்லத்தில் கரமணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
திருவல்லம் சிறீ பரசுராம சுவாமி கோவில் | |
---|---|
Temple Gate | |
அமைவிடம் | திருவல்லம், கேரளம், இந்தியா |
ஆள்கூற்றுகள் | 8°26′13″N 76°57′04″E / 8.437°N 76.951°E |
இது கேரளாவில் பரசுராமருக்கு அமையப் பெற்ற ஒரே கோவில் ஆகும்.
கோவளம் கடற்கரையில் இருந்து 6 கி.மீ தூரத்திலும், திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், ஆற்றுக்கால் பகவதி கோயிலிலிருந்து 3 கி.மீ தொலைவிலும், பழஞ்சிறா தேவி கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவிலும், சிறீ ஆலுக்காடு தேவி கோயிலிலிருந்து 1 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.[1]
இந்த பாரம்பரிய கோவில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னங்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுபாண்டியன் காலத்தின் பிற்பகுதியில் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த கோவில் கேரள தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. இந்த கோவிலை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் நிர்வகிக்கிறது.[2]
இது தர்ப்பணம் செய்ய, அதாவது முன்னோர்களுக்கு அஞ்சலி செய்ய புகழ் பெற்ற இடமாகும்.
பரசுராமர் கேரளாவை உருவாக்கியவர் என்றும் அதனால் அவருக்கு அமைக்கப் பெற்ற கோயில் எனவும், அவரது பக்தர்களுக்கு புனித இடமாகவும் புராணம் கூறுகிறது.[3]
ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு வரும் இந்துக்கள் கரமனை ஆற்றில் குளித்து விட்டு தமது மூதாதையர்களுக்கு நினைவு கூறும் சடங்கான தர்ப்பணம் எனும் மத சடங்கு செய்கிறார்கள்.ஆடி அமாவாசை என்பதை மலையாள மொழியில் 'கர்க்கிடக வாவு' என கூறுகிறார்கள். அன்றைய தினம் கேரளத்தில் அரசு விடுமுறை நாளாகும்.[4]