திருவள்ளுவர் நகர்

சென்னை மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள திருவான்மியூரின் ஒரு பகுதி, திருவள்ளுவர் நகர் ஆகும். இது வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் ஒரு அங்கமாகும். கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக இது விளங்குகிறது.

கோயில்கள் தொகு

உலக பிரசித்தி பெற்ற நாகாத்தம்மன் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது. ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெரும். கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி திருவீதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு. மேலும் வினைதீர்த்த விநாயகர் ஆலயமும், பிரசித்தி பெற்ற ஹரே கிருஷ்ணா இயக்கமும் இங்கு அமைந்துள்ளது.

பூங்கா தொகு

இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒன்று அமந்துள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் சிறுவர்கள் விளையாடும் இடமாக, இயற்கைச் சூழலோடு காணப்படுகிறது. இது வட்டார போக்குவரத்து அலுவலகம் பேருந்துநிலையத்தின் மிக அருகாமையில் உள்ளது. பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாக இது அமைந்துள்ளது.

பள்ளி தொகு

இங்கு நவீன வசதிகளுடன் அமைந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளி ஒன்று உள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்ட பள்ளியாக இருப்பது இதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.

திடல் தொகு

மாணவர்கள் விளையாடி மகிழ, மிகப்பெரும் விளையாட்டுத் திடல் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இது சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பிரபலங்கள் தொகு

பிரபல திரைப்பட நடிகர் அஜீத்குமாரின் வீடு இங்கு அமைந்துள்ளது. இவரைத் தவிர பல்வேறு பிரபலங்களின் வசிப்பிடமாகவும் திருவள்ளுவர் நகர் விளங்குகிறது.

தொழில் தொகு

அனைத்து தரப்பு மக்களும் இங்கு வசித்து வருகின்றனர். எனினும் கணினி மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பலரின் வசிப்பிடமாக இது உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் தொகு

2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திரு. ம.க. அசோக் (அ.தி.மு.க) இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவர்_நகர்&oldid=1583707" இலிருந்து மீள்விக்கப்பட்டது